ஓம் நமசிவய

 

ஜோதிடம்(சோதிஇடம்=சோதிடம்)

 

ஜோதிடம் இதன் அர்த்தம் சோதி + இடம் என்பது ஆகும்.

 

அதாவது இருளான இடத்தில் ஒரு விளக்கு இருந்தால் எவ்வாறு அந்த இடம் ஒளி பெறுமோ, அதுபோல் ஜாதகர் மனமானது குழப்பம் என்ற (இடர்) இருளில் சிக்கித் தவிக்கும் போது ஜோதிடர் (சோதி + இடர்) என்பவர் நல்ல வழிகாட்டியாய் இருந்து வாழ்வு முன்னேற உறுதுணையாய் இருப்பார்கள்.

 

இந்த கலையானது நெடுங்காலமாக இருந்து வரும் கலையாகும். பொய்யான எந்த விஷயமும் நீடித்து நிற்காது. இது உண்மையாகும். விதி, நேரம், காலம் என்பது எல்லம் அவரவர் முன் ஜென்மத்தில் செய்த நல்ல, கெட்ட பலன்களுக்கு ஏற்றவாறு தற்பொழுதைய கால கட்டத்தில் அனுபவிக்க நேரிடுகின்றது.

 

நல்ல குரு, ஜோதிடர்கள் அமைவது அவரவர் புண்ணியத்தைப் பொறுத்தது ஆகும். இதனால் யாரையும் குறை கூறிப் பயன் ஒன்றும் இல்லை. ஜோதிடர் கணக்குப் பொய்த்து விடும் ஆனால் ஜோதிடத்தின் காலக்கணக்கு ஒருக்காலும் பொய்க்காது.

 

எனவே யாராவது ஒரு சிலருக்கு ஜாதகம் பிசகி இருக்கலாம், அதனால ஜோதிடம் பொய்த்து விடுவதில்லை. ஜோதிடத்தில் லக்னம் என்பது உயிர் போன்றது, இராசி அல்லது சந்திரன் நின்ற இடம் உடல் மற்றும் ஜாதகரின் குணம் மற்றும் மனதைக் குறிக்கும்.

You are here: Home